கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளியில் 1227 நாட்களை தாண்டிய காணாமல் ஆக்கப்பட்டாேரின் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் 1227 நாட்களை தாண்டிய நிலையில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பதாகைகளை ஏந்தியவாறும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள்,

‘கூட்டமைப்பினர் பலமுறை எம்மை ஏமாற்றி விட்டார்கள் சென்ற நல்லாட்சி அரசாங்கத்தில் அனைவருக்கும் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்து நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சி அமைத்தார்கள் அன்றிலிருந்து இன்று எமக்கு எந்த பயனும் எட்டப்படவில்லை.

இம்முறை வாக்களிக்கும் மக்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவார்கள் சரியான முறையில் அடையாளம் கண்டு அவர்களுக்கு வாக்களிக்கும்படி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேட்டுள்ளார்கள்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொன்றுள்ளார் என்கிறார். அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.’ – என்றனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் – வாக்களிப்பு நேரம் நீடிப்பு

G. Pragas

உணவகங்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்!

G. Pragas

போர்ப்ஸ் பட்டியலில் முன்னிலையில் இருப்பது யார்?

Bavan