செய்திகள்

129 கி.கிராம் கேரளா கஞ்சா மீட்பு

வெல்லம்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது 129 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மேற்கொண்ட இந்த சோதனையின்போது 38 வயதுடைய தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும், மீட்கப்பட்ட கஞ்சா தொகையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941