செய்திகள்

13 அம்சக் கோரிக்கைகளை சஜித் ஏற்கத் தயாரில்லை

ஐந்து தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக, பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தயாராக இல்லை என்று அவரது பரப்புரைக் குழுவைச் சேர்ந்த ஷிரால் லக்திலக தெரிவித்தார்.

ஐந்து தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாதென ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாதென சஜித் பிரேமதாச சார்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள ஷிரால் லக்திலக,

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்களைப் பகிர்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக, சஜித் பிரேமதாச தெளிவான கொள்கையை முன்வைத்துள்ளார். அதற்கு அப்பால் பேச்சுக்களை நடத்துவதற்கு எதுவும் இல்லை. தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் – என்றார்.

Related posts

ரஞ்சனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு; நீதிபதிகளை விசாரிக்க உத்தரவு!

G. Pragas

சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்

Bavan

தே.அ.அட்டை விநியோகத்திற்கு குறுந்தகவல் சேவை

reka sivalingam

Leave a Comment