in ,

139 கிலோகிராம் கஞ்சாவுடன் பருத்தித்துறையில் இருவர் கைது!

139 கிலோகிராம் கஞ்சாவுடன் பருத்தித்துறையில் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து படகு ஒன்றில் யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட 139 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றுக்காலை 6 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான படகு ஒன்றை சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டது.

கடற்படையினரின் படகைக் கண்டவுடன் சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருள் பொதிகளை கடலில் வீசிவிட்டனர். அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அவற்றைக் கடத்திவந்தனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறை தும்பளை மற்றும் கொட்டடியைச் சேர்ந்த 22, 26 வயதுடைய இருவரே கைதுசெய்யப்பட்டனர்.

கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கடற்படையினர் கூறினர். சந்தேகநபர்கள் சட்டநடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

6 மாதங்களான குழந்தை கொரோனாவால் சாவு!

இலங்கையில் தொற்று 40 வீதமாக திடீர் அதிகரிப்பு, உலக சுகாதார அமைப்பு அறிக்கை!