in ,

14 நாள்கள் நாடு முடங்கியும் வீரியம் தணியாத தொற்று! – அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இன்று!!

நாடு முடக்கப்பட்டு 14 நாள்கள் கடந்துள்ளபோதும், இன்றும் 3 ஆயிரத்து 410 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 254 பேர் கொரோனாத் தொற்றுக்குக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 33 ஆயிரத்து 317 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கொரோனாத் தொற்றால் மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அரச தகவல் திணைக்களத்தால் ஒரே நாளில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து இலங்கைளில் இதுவரை ஆயிரத்து 656 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

UTHAYAN TV: Prime Time Tamil News | 8 PM | இரவு 8 மணி பிரதான செய்திகள் 
👉
🌞 Subscribe us: https://bit.ly/2QOJTcB
#SriLankaNews #lka #uthayanTv #uthayannews #uthayan_paper #uthayandaily

யாழ். போதனா மருத்துவமனை கொவிட் விடுதிகள் நிரம்பின!!

முல்லைத்தீவு; முதலாவது கொரோனா மரணம்!