செய்திகள் பிராதான செய்தி

15 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது – விபரங்கள் இதோ

இடைக்கால அரசாங்கத்தின் 15 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (22) சற்றுமுன் பதவியேற்றுக் கொண்டது.

அமைச்சரவை விபரம் வருமாறு,

  • மஹிந்த ராஜபக்ச – நிதி, பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொருளாதாரம் மற்றும் கொள்கைத் திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி.
  • நிமால் சி.டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு.
  • ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு அபிவிருத்தி.
  • தினேஸ் குணவர்த்தன – வெளிவிவகாரம், திறன் மற்றும் தொழிலாளர் அபிவிருத்தி.
  • டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை.
  • பவித்திரா வன்னியாராட்சி – சுகாதாரம், சுதேச மருத்துவம், மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு.
  • பந்துல குணவர்த்தன – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்.
  • ஜானக ப தென்னக்கோன் – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்.
  • சமல் ராஜபக்ச – மகாவலி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலன்.
  • டலஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகாரம்.
  • ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்.
  • விமல் வீரவன்ச – சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவம்.
  • மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி.
  • எஸ்எம்.சந்திரசேன – சுற்றாடல் மற்றும் வனவிலங்குள், காணி மற்றும் காணி விவகாரம்.
  • ரமேஸ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாயம்.
  • பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு அபிவிருத்தா, சுற்றுலா மற்றும் விமான சேவைகள்.

Related posts

இனவாதத்திற்கு மட்டு மக்கள் ஆப்பு வைத்துள்ளனர் – அஸ்மி

G. Pragas

கொலைக் குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்த பொலிஸார்

G. Pragas

அன்று என் தந்தை இன்று நான் – நவீன் திஸாநாயக்க பெருமிதம்

G. Pragas

Leave a Comment