செய்திகள் மலையகம்

15 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 460

இலங்கையில் கடந்த 15 மணி நேரத்தில் 40 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 460 ஆக உயர்ந்துள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட 40 பேரில் 20 கடற்படை வீரர்கள், கடற்படை வீரர்களின் உறவினர்கள் நால்வர் மற்றும் தனிமை மையத்தில் உள்ள (பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த) 16 பேரும் அடங்குகின்றனர்.

அத்துடன் மொத்தமாக பண்டாரநாயக்க மாவத்தையில் 98 பேரும், கடற்படையினரில் 85 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 335 ஆக காணப்படுகிறது.

Related posts

வறிய குடும்பங்களுக்கு உலருணவு!

G. Pragas

சாதனை படைத்த விஜயின் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்

Bavan

சப்ராஷ் அஹமட்டின் பதவி பறிக்கப்பட்டது!

G. Pragas