செய்திகள் பிரதான செய்தி

150 அடி ஆழத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ்; இருவர் படுகாயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட பங்களாஅத்த பகுதியில் இன்று (27) அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளி ஒருவரை நுவரெலியா வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அம்பியூலன்ஸ் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அபகரிக்கப்படவிருந்த பாதை மீட்பு!

Tharani

தேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார் கிழக்கு ஆளுநர்

reka sivalingam

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிவதற்கு தீர்மானம்

reka sivalingam