செய்திகள் பிராதான செய்தி

1500 ரூபாய் பெற்றுத் தருவேன் – உறுதியளித்தார் சஜித்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.

கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அதுவரையில் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபா கிடைப்பதை உறுதி செய்வார் என்றும் அறிவித்தார்.

நிகழ்வில் அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியல்ல, ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்ட ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜரட்னம் உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.

சஜித்துக்கு ஆதரவளிப்பதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மேடையேறினர்.

Related posts

தேரரின் உடலை தகனம் செய்ய நாளை வரை தடை!

G. Pragas

மனிதக் கடத்தலை தடுப்பது தொடர்பான பயிச்சிப்பட்டறை

G. Pragas

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

G. Pragas

Leave a Comment