செய்திகள் பிரதான செய்தி

153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்

தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைகளுக்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழுவின் அனுமதியுடன் 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய இந்த அதிபர்களுக்கான பாடசாலைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 25 ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வெற்றிடம் ஏற்பட்டிருந்த 153 பாடசாலைகளுக்காக அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சட்டவிரோத மணல் அகழ்வு

Tharani

கொரோனா தனிமைப்படுத்தல் ஹோட்டல் இடிந்து 10 பேர் பலி!

Tharani

வரலாற்றில் இன்று- (10.03.2020)

Tharani

Leave a Comment