செய்திகள் விளையாட்டு

16 வயதில் ஹட்ரிக் சாதனை!

பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாேட்டியில் முதலில் களம் இறங்கிய பங்களாதேஷ் 233 ஓட்டங்களில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் 445 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. 3 வது நாளில் 212 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஷ் 2 வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடியது.

41 வது ஓவரை நசீம் ஷா வீசினார். இந்த ஓவரின் 4 வது பந்தில் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். அடுத்த பந்தில் தைஜுல் இஸ்லாமையும் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். கடைசி பந்தில் மஹ்மதுல்லாவை வீழ்த்தி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் அவர் 16 வயதில் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஹட்ரிக் உடன் 2 வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Related posts

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!

Tharani

ஹெரோயின் வைத்திருந்த நபர் யாழில் கைது

கதிர்

மட்டு’விலும் கல்விச் செயற்பாடுகளுக்கான முன்னாயத்த ஆரம்பம்

G. Pragas