செய்திகள்வவுனியா

அரசுக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலை மாணவர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி மருத்துவமனை சுற்றுவட்டம் கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை வந்தடைந்து. அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது.

இதன்போது ஜனாதிபதி கோத்தாபாய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்கள் கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தால் ஏ9 வீதிப் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது. மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக மாணவர்கள் நீண்ட நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் குடிதண்ணீர்ப் போத்தல்களை வழங்கி ஆதரவை தெரிவித்திருந்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214