செய்திகள் பிரதான செய்தி

18 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்து!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் 18 கிலோ கொழுந்தை கட்டாயம் பறிக்க வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிரேக்லி தோட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்தின் இந்த அடக்குமுறை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் நேற்று (08) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வறட்சி நிலவுகின்றது. நாட்டில் அதாசாரண சூழ்நிலையும் நிலவுகின்றது. இந்நிலையில் 18 கிலோ கொழுந்து பறிப்பது இலகுவான விடயமல்ல.

14 கிலோ கொழுந்து எடுத்தால் அரைநாள் பெயரே விழுகின்றது. எனவே, இதற்கான தீர்வு கிடைக்கும்வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் எனத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Related posts

வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை

கதிர்

கரவெட்டி – பருத்தித்துறை செயலக பிரிவுகளில் ரூ.140 மில்லியனில் அபிவிருத்தி திட்டம்

Tharani

கொழும்பில் ஒழுக்கமற்ற செயற்பாடுகள் அதிகரிப்பு!

Tharani