செய்திகள்பிரதான செய்தி

19ஆம் திகதி முதல் மண்­ணெண்­ணெய் விநி­யோ­கம்

எதிர்­வ­ரும் 19 ஆம் திகதி முதல் தொடர்ச்­சி­யாக மண்­ணெண்­ணெய் விநி­யோ­கம் செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது. சபு­கஸ்­கந்த எண்
­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி மீண்­டும் செயற்­ப­டத் தொடங்­கி­னால் இன்­னும் இரண்டு மூன்று நாள்­க­ளில் மண்­ணெண்­ணெயை உற்­பத்தி செய்ய முடி­யும் என மின்­வலு மற்­றும் எரி­சக்தி அமைச்­சர் காஞ்­சன விஜே­சே­கர நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:–

கடந்த சில வாரங்­க­ளாக தொடர்ச்­சி­யாக மண்­ணெண்­ணெய் வழங்க முடி­யாத போதி­லும், சந்­தை­யில் விநி­யோ­கிக்­கப்­பட்ட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட கையி­ருப்பு விநி­யோ­கம் முறை­கே­டா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சில சந்­தர்ப்­பங்­க­ளில் மீன­வர்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்ட மண்­ணெண்­ணெயை ,தனி­யார் பேருந்­து­களை வைத்­தி­ருப்­ப­வர்­கள் கொள்­வ­னவு செய்து டீச­லுக்கு பதி­லாக மண்­ணெண்­ணெய் மூலம் பேருந்­து­களை இயங்­கி­யுள்­ள­னர்.

ஒரு லீற்­றர் மண்­ணெண்­ணெய்யை 87 ரூபா­வுக்கு விற்­பனை செய்­வ­தால் அர­சுக்கு ஏற்­ப­டும் நஷ்­டத்தை இனி­யும் தாங்க முடி­யா­தது. எதிர்­கா­லத்­தில் விலை மாற்றி அமைக்­கப்­ப­டும்.

மண்­ணெண்­ணெய் விலை திருத்­தம் செய்­யப்­பட்­ட­வு­டன் மீனவ சமூ­கம், பெருந்­தோட்­டக் கைத்­தொ­ழில்­கள் மற்­றும் குறைந்த வரு­மா­னம் பெறு­வோ­ருக்கு நிவா­ர­ணம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்= என்­றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214