செய்திகள் பிரதான செய்தி

“இருவரும் நடிகர்கள்” இயக்குனரை கண்டறிய வேண்டும்! சதிகாரர் ராஜிதவே

வெள்ளை வான் நாடகத்தை இயற்றிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் புகார் பொய்யான ஒன்று.

இவ்வாறு கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வெள்ளை வான் மனிதக் கட்டத்தல் சாரதிகள் எனத் தெரிவித்து பேட்டியளித்த இருவர் கைது செய்யப்பட்டமை குறித்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

இந்த நாடகத்தை இயற்ற உண்மையில் யார் அறிவுறுத்தியது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அவர்கள் இருவரும் நடிகர்கள். இயக்குனர் இன்னும் முக்கியமானவராக இருப்பார். இந்த நடிகர்கள் இயக்குனர் யார் என்பதை கூற வேண்டும். அது தெரியவந்தால் சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். – என்றார்.

இதேவேளை இந்தச் சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை வழங்க சிங்களே ஜாதிக சன்விந்தநாய அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீத் சஞ்சீவ நேற்று சிஐடிக்கு சென்றார். பின்னர் ஊடகங்களில் பேசும் போது,

சிஐடியினர் அன்தோனி டக்ளஸ் பெர்னாண்டோ மற்றும் அத்துல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை கைது செய்தது மாத்திரமல்லாது, ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தனவையும் கைது செய்யுமாறு சிஐடியிடம் கேட்டுக் கொண்டோம். ராஜித ஒரு சர்வதேச சதிகாரர் என்பதால் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிஐடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், மேலும், அவரது குடிமை உரிமையை இல்லாமல் செய்ய நாடாளுன்ற ஆணைக்குழுவை நியமிக்க கோருகிறோம்.

முன்னாள் சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவும் வெள்ளை வான், தங்கக் கடத்தல் சதித்திட்டத்தின் பங்குதாரராவார். சேற்றை வாரிவீசும் அந்த காணொளிகளுக்கு சட்டரீதியாக பாதுகாப்பளித்தவர் ஷானி. அவர் பாதுகாக்க முயன்றது ஏன் என்று அறிய ஆவலாக இருக்கிறோம். தங்கக் கடத்தல் குறித்து ஜனாதிபதி கோத்தாபய மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த ஒரே நபர் ராஜித மட்டுமல்ல. இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் பல்வேறு சர்வதேச அமைப்புக்களால் பணம் செலுத்தப்படும் ஒரு குழு இருக்கிறது. முன்னாள் அமைச்சர குணரத்ன வீரக்கோனும் அத்தகைய நபரே.

கோத்தாபயவை சங்கடப்படுத்த யூஎன்எச்ஆருக்கு (UNHR) வழங்கப்பட்டுள்ள ஸ்க்ரிப்ட் ஆதரமாற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வரையப்படுள்ளது. – என்றார்.

(சன்டே ஒப்சேவர்மாெழிபெயர்ப்பு : உதயன்

Related posts

திருவள்ளுவர் சிலை கையளிப்பு

Tharani

“நான் சொல்லவில்லை” மறுக்கிறார் சுமந்திரன்

G. Pragas

விபத்தில் ஏழு பேர் காயம்!

G. Pragas

Leave a Comment