செய்திகள் யாழ்ப்பாணம்

2ம் கட்ட சமுர்த்தி நிதி கட்டாயம் வழங்கப்படும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முதலாம் கட்ட 5000 ரூபாய் உதவி பணத்தினை பெற்ற அனைவருக்கும் இரண்டாம் கட்ட நிதி வழங்கப்படும் எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக அரசினால் வழங்கப்படும் இடர் நிதியினை யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும், ஏப்ரல் மாத உதவித் தொகையினை பெற்ற 135,113 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை கட்டாயமாக வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களுடைய பிரதேச சமுர்த்தி உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பொது மக்கள் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெற்றுகொள்ள முடியும் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்று எண்ணிக்கை 869 ஆனது!

G. Pragas

மின்வெட்டு அமுலாகாது – மஹிந்த

G. Pragas

கடத்தப்பட்ட தூதரக ஊழியரிடம் 9 மணிநேரம் விசாரணை! பயணத் தடை நீடிப்பு

G. Pragas