செய்திகள்

20ம் திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி போராட்டம்!

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 20வது திருத்தச்சட்ட மூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நேற்று (08) போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

அரசியலமைப்பின் 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராகவும் 19வது திருத்தத்திற்கு அப்பால் சென்று 19+ என்ற செயற்திட்டத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச்சிலைக்கு முன்னால் உறுதிமொழியெடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது கழுத்தில் கருப்புப்பட்டியணிந்தவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

வரணி விபத்தில் ஒருவர் சாவு!

G. Pragas

தலைமைப் பதவியை துறந்தார் ப்ளஸிஸ்

G. Pragas

தொடர்கிறது தமிழ் அழிப்பு

reka sivalingam