in

20 ஆவது அரசியல் திருத்தத்துக்கு ஆதரவளித்தபோதே ரிஷாத்தை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம்!

நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினை இன்று (28) புதன்கிழமை குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது அவருடன் குற்ற புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இரு கட்டமாக தடுப்பூசி பெற்றவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்! மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!