செய்திகள் யாழ்ப்பாணம்

200 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் கையளிப்பு!

செரண்டிப் சிறுவர் இல்லத்தினரிடம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் விடுத்த கோரிக்கையை அடுத்து சுமார் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் இணுவில், மானிப்பாய், கட்டுடை, மாவிட்டபுரம் ஆகிய கிராமங்களில் வாழுகின்ற சுமார் 200 குடும்பங்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது.

செரண்டிப் சிறுவர் இல்ல தலைவர் கந்தசாமி, வலிதெற்கு பிரதேச சபை தலைவர் க.தர்சன், யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானன், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொதிகளை குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று வழங்கிவைத்தனர்.

Related posts

மருத்துவர்களின் தவறால் பலியான சிறுமி!

கதிர்

கைதுக்கு தடை காேரி நீதிபதி ஜிஹான் மனுத்தாக்கல்

reka sivalingam

போதைப் பொருள் குற்றச் செயலை தடுக்க நடவடிக்கை

Tharani