செய்திகள்

படைப்பாற்றல் உரிமைக்கு கொடுப்பனவு வழங்கப் பரிந்துரை

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாடல்களை ஒலி, ஔிபரப்பு போது படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் வழங்குவதற்கு கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வை சபை பரிந்துரைத்துள்ளது.

இதற்கமைவாக வானொலிகளில் ஒலிபரப்பப்படும் பாடல் ஒன்றுக்கு 30 ரூபாவை படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவாக வழங்க வேண்டும்.

இத்தொகை 2022 ஆண்டு முதல் 50 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சபை பரிந்துரைத்துள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாடல் ஒன்றுக்கு 100 ரூபாவை படைப்பாற்றல் உரிமைக்கான கொடுப்பனவாக செலுத்த வேண்டும்.

இத்தொகை 2022 ஆண்டு தொடக்கம் 250 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

சிந்தனைக்கு…

Tharani

கிளிநொச்சி பொது நூலக வாசிப்பு மாத பரிசளிப்பு விழா.

Tharani

தப்பியாேடிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு!

Tharani

Leave a Comment