செய்திகள் பிரதான செய்தி

2019ல் உயர்தரப் பரீட்சை எழுதியாேருக்கான வெட்டுப்புள்ளி தயாரிக்கும் பணி நிறைவு!

2019இல் க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுத்து பல்கலைக்கழக அனுமதிகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆயினும் தயாரிக்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ப.மா.ஆ தலைவரும், பேராசிரியருமான சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்தப் பணி நிறைவடைய காலதாமதம் ஏற்பட்டதாகவும், மேலும் தற்போது உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறுவதால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எனினும், 2019 உயர்தரப் பரீட்சைகள் முடிந்து ஒரு வருடகாலம் ஆகியும் இன்னும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடாமை மற்றும் ஒக்டோபர் முதல் இரு வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தமை போன்றவையை காரணம் காட்டி மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். நயினாதீவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்!

Tharani

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் விசேட அறிவிப்பு!

Bavan

சற்றுமுன் 69 பேருக்கு கொரோனா உறுதி!

G. Pragas