செய்திகள்

கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

2020ம் ஆண்டிற்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 09 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று (19) இடம்பெற்ற போது இன்று காலை 10.00 மணியளவில் கொட்டகலை பிரதேச சபையின் 2020 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 09 வாக்குகள் அளிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு நல்கிய உப தலைவர், உறுப்பினர்கள், அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவிப்பதோடு வரவு செலவு திட்டத்தை தயாரிக்க உதவிய செயலாளர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை சபை தலைவர் தெரிவித்தார்.

அதன் படி அடுத்த வருடத்திற்கு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதுக்கு திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

Related posts

73 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மித்!

Tharani

குணமடைந்தோர் எண்ணிக்கை 941 ஆக உயர்வு!

G. Pragas

“தாய் மண்ணை பாதுகாப்போம்” கவனயீர்ப்பு போராட்டம் நாளை

கதிர்