uncategorizedசெய்திகள்பிந்திய செய்திகள்

2048 இல் இலங்கையை கடனற்ற நாடாக்குவோம் ஹாின் நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக்குவோம். இதற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி அர்ப்பணிப்புடன் பாடுபட தயாராக உள்ளோம். எனது தாய் வீட்டிலிருந்து இனியொரு போதும் வெளியேற மாட்டேன் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம் கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக மாற்றியமைக்க முடியும்.

அதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட நாம் தயார். நாட்டை ஸ்திரமாக்குவதற்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களுக்கு எதிரான போராட்டத்தினை நாம் விரைவில் ஆரம்பிப்போம்.என்று கூறியுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282