செய்திகள் விளையாட்டு

ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் தங்கம் வென்ற மலையக இளைஞன்

21வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ எமஸ்டன் தோட்டத்தை சேர்ந்த மணிவேல் சத்தியசீலன் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மலேசியா கூச்சிங் சேவாக் விளையாட்டு அரங்கில்; 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியில் வேக நடைப்போட்டியிலேயே இவருக்கு இந்தத் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

மலேசியாவில் நடைபெற்று வரும் 21 வது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் 30 நாடுகளை சேர்ந்த 3000 க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியிலேயே மணிவேல் சத்தியசீலன் இந்த சாதனையை தனதாக்கி கொண்டுள்ளார்.

Related posts

வவுனியாவில் ஹெரோயின்; இருவர் கைது!

G. Pragas

யாழ். நயினாதீவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம்!

Tharani

டெங்கு காய்ச்சலால் பெண் மரணம்

reka sivalingam

Leave a Comment