in , ,

21 ஆண்டுகளாக மகனை தேடிய தாய்; நடந்தது அறியாமல் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 21 ஆண்டுகளாக தேடியலைந்து போராடிவந்த தாயொருவர், மகனுக்கு நடந்ததை அறியாமலே சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா – மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயாரே நேற்று (22) மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் 2000ம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் 1,465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பிலும் தாய் ஒருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி, பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

ஓ/எல் சித்தியடையாதவர் ஹரினே; ‘ஹ’வை உச்சரிக்க தெரியாதவர் லான்சவே – நாடாளுமன்றில் மோதல்!