in

ஆணை­யா­ள­ரின் அறிக்­கையை வர­வேற்­கி­றது கூட்­ட­மைப்பு!

ஆணை­யா­ள­ரின் அறிக்­கையை வர­வேற்­கி­றது கூட்­ட­மைப்பு!

இலங்கை அரசை சர்­வ­தே­சக் கண்­கா­ணிப்­புப் பொறிக்­குள் சிக்­க­வைத்­துக் கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுத்­துள்ள ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்­செல் பச்­­லெட் அம்­மை­யா­ரின் வாய்­மூல அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வர­வேற்­றுள்­ளது.
இது தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ‘உத­யன்’ பத்­தி­ரி­கை­யி­டம் நேற்­றி­ரவு தெரி­விக்­கை­யில்,

பொறுப்­புக்­கூ­றல் கட­மை­யி­லி­ருந்து இலங்கை அரசு ஒரு­போ­தும் தப்­ப­மு­டி­யாது.
ஐ.நா. தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­க­ளை­யும், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் மிச்­செல் பச்­லெட் அம்­மை­யா­ரின் கோரிக்­கை­க­ளை­யும் இலங்கை அரசு நிறை­வேற்­றியே தீர வேண்­டும். -– என்­றார்.

இதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊடக அறிக்­கை­யில்,”இலங்கை அரசு, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யோடு இணங்­கிச் செயற்­ப­டும் என்று ஜனா­தி­பதி கொடுத்த உத்­த­ர­வா­தத்­தைச் செய­லில் காண­வேண்­டும் என்று ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் வலி­யு­றுத்­தி­யுள்­ளதை நாம் அவ­தா­னித்­துள்­ளோம்.
இலங்­கை­யில், அண்­மை­யில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தை­யும், வேறு சட்ட ஆட்­சிக்கு முர­ணான விட­யங்­க­ளை­யும் ஆணை­யா­ளர் சுட்­டிக்­காட்­டி­ய­தை­யும் வர­வேற்­கின்­றோம்.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நீதி சம்­பந்­த­மான திட­மான நிலைப்­பாட்­டுக்­காக ஆணை­யா­ள­ருக்கு நன்றி கூறு­கின்­றோம்.
அதே­போல், சாட்­சி­யங்­க­ளைச் சேக­ரித்­தல் மற்­றும் பாது­காத்­த­லுக்­கான பொறி­மு­றையை ஏற்­ப­டுத்­து­வது சம்­பந்­த­மாக எடுக்­கப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் விரை­வில் நிறை­வு­றும் என்று எதிர்­பார்க்­கின்­றோம்” – என்­றுள்­ளது.

மனித உரிமைகள் மோசம் ஆனாலும் கோத்தா அரசு மீது நம்பிக்கை! பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ஐ.நா!

மாடு கடத்தல் வழக்கில் அதிகார துஷ்பிரயோகம்! மன்­னார் தவி­சா­ளரை பதவி நீக்­கி­னார் ஆளு­நர்!