in

வரலாற்றில் இன்று: டிசம்பர் 25

800 – சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.

1000 – ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.

1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1643 – கிறிஸ்மஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரிகப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறிஸ்மஸ்த் தீவு எனப் பெயரிடப்பட்டது.

1741 – ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

1758 – ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜேர்மனியரால் அவதானிக்கப்பட்டது.

1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்மஸ் நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1926 – ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.

1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் ~70,000 பேர் இறந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.

1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

1968 – கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1977 – இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.

1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.

1989 – ருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1991 – உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.

2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.

2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.

டுவிட்டர் செயலிகளை புதுப்பிக்க ஆலோசனை!

கட்டுவப்பிட்டிய தேவலாயத்தில் விசேட ஆராதனை