செய்திகள்மன்னார்

அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை! பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை!

அகற்­றப்­பட்­டது அந்­தோ­னி­யார் சிலை!
பிள்ளையார் சிலையை மீள நிறுவ நடவடிக்கை!

மன்­னார் மடு பகு­தி­யில், சுமார் 40 வரு­டங்­க­ளா­கக் காணப்­பட்ட பிள்­ளை­யார் சிலை, ஒரே இர­வில் சிதைக்­கப்­பட்டு, அச்த இடத்­தில் அந்­தோ­னி­யார் சிலை வைக்­கப்­பட்ட சம்­ப­வம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய நிலை­யில், அந்­தோ­னி­யார் சிலை நேற்று அகற்­றப்­பட்­டது. அந்த இடத்­தில் மீள­வும் பிள்­ளை­யார் சிலையை வைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

மடு – பரப்­புக்­க­டந்­தான் வீதி­யில் மடு தேவா­ல­யத்­தி­லி­ருந்து 4 கிலோ­மீற்­றர் தூரத்­தில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யார் சிலையே சிதைக்­கப்­பட்­டது.
அந்­தப்­ பிரதேசம் காட்­டுப்­ப­குதி என்­ப­தால் அந்­தப்­ப­கு­தி­யால் செல்­ப­வர்­கள் மத­வே­று­பா­டின்றி பிள்­ளை­யாரை வணங்­கி­விட்­டுச் செல்­வர் என்று பகுதி மக்­கள் கூறு­கின்­ற­னர்.
இந்­த­நி­லை­யில், அந்­தப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த பிள்­ளை­யா­ருக்கு 4 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் சிறிய கோவில் ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு, முதற்­கட்­ட­மாக மூலஸ்­தா­னம் அமைக்­கப்­பட்டு பிள்­ளை­யார் எழுந்­த­ரு­ளி­யி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில் அந்­தப் பிள்­ளை­யார் சிலையை விச­மி­கள் நேற்­று­முன்­தி­னம் அகற்­றி­விட்டு அந்­தோ­னி­யார் சிலையை வைத்­துள்­ள­னர்.

இந்­த­வி­ட­யத்தை அங்கு வாழும் இந்­து­மக்­கள் மற்­றும் இந்­துக் குருமார்கள் மன்­னார் மாவட்­டச் செ­ய­ல­ருக்கு முறை­யிட்­ட­னர்.
மன்­னார் மாவட்­டச் செ­ய­லர் ஏ.ஸ்ரான்லி டி .மெல், மடு பொலி­ஸார் மற்­றும் மடு பிர­தேச செய­லா­ளர் ஆகி­யோர் குறித்த பகு­திக்கு நேற்­று நேரில்சென்று பார்­வை­யிட்­ட­னர். அத்­து­டன் புதி­தாக வைக்­கப்­பட்ட அந்­தோ­னி­யார் சிலை அகற்­றப்­பட்டு மடு பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டது.
அந்த இடத்­தில் மீண்­டும் பிள்­ளை­யார் சிலையை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. சிலை சிதைப்­புத் தொடர்­பாக மடு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282