in

24 மணிநேரமும் பூட்டப்பட்ட அறைக்குள்! ரிஷாட்

மலசலகூடத்துக்கு மட்டுமே என்னை வெளியில் செல்ல அனுமதிக்கின்றனர். அது தவிர நான் தங்கியிருக்கும் அறையை 24 மணிநேரமும் மூடியே வைத்துள்ளனர் என சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று (04) அவர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி என்னை கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னிடம் விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்து வைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்த போது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே. வேறு எந்தக் காரணமும் இல்லை என்றார்.

டெங்கு நுளம்புகளை கண்டறிய பயிற்சி பெற்ற பொலிஸ் மோப்ப நாய்கள்!

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துகின்ற நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்துவது வெறுக்கத்தக்கது!