in , ,

24 மணி நேரத்தில் கொள்ளையன் கைது; நகைகள், தங்கமும் மீட்பு!

மட்டக்களப்பு – மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதமகுருவின் வீட்டில் கொள்ளையினை மேற்கொண்ட சந்தேக நபர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதுடன் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் (18) மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஆலய பிரதம குருவின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த தங்கம் மற்றும் காசுகளை கொள்ளையர்கள் கொள்ளையிட்டு சென்றிருந்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று (19) கல்லடி, வேலூர் பகுதியை சேர்ந்த சந்தேம நபர கைது செய்யப்பட்டார்.

குறித்த வீட்டில் கொள்ளையிடப்பட்ட ஏழரை இலட்சம் ரூபா பெறுதியான ஏழரைப்பவுண் தங்கமும், உருக்கப்பட்ட நிலையில் நகையாகவும் மீட்கப்பட்டது. (150)

அனைவருக்கும் இராணுவ பயிற்சியளிப்பது நடைமுறை சாத்தியமற்றது – சரத் பொன்சேகா

யானைகளின் தொல்லையால் விவசாயிகள் கவலை; இன்று வந்த யானைகள் வெடிவைத்து கலைப்பு!