நிகழ்வுகள்யாழ்ப்பாணம்

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்!

இலங்கை-இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியது.
இந்த திருவிழா நாளையும் நடைபெறவுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் ஊடாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டாலும் அதிலுள்ள புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் வருடாந்தம் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுடன் சகோதரத்துவ உணர்வுடன் இணைந்தே பங்கேற்று வருகின்றனர்.

இரு தரப்பு மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையிலும், கொரோனா வைரஸ் பரவல் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையிலும் இம்முறை திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவான பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும் இன்றும் நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக விசைப்படகு மீனவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282