செய்திகள் விளையாட்டு

மல்யுத்த வீராங்கனை தற்கொலை?

ஜப்பானின் பிரபல தொழிற்சார் மல்யுத்த (ரெஸ்லிங்) வீராங்கனை ஹனா கிமுரா தனது 22 வயதில் இன்று (23) உயிரிழந்துள்ளார்.

நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி ஷோவான டெரஸ் ஹவுஸிலும் பங்குபற்றியவர் ஹனா கிமுரா.

கிமுரா அங்கம் வகிக்கும் ஸ்டார்டம் ரெஸ்லிங் எனும் நிறுவனம், அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மரியாதைக்குரிய வகையில் செயற்பாடுமாறு ரசிகர்களிடம் அந்நிறுவனம் கோரியுள்ளது.

ஹனா கிமுராவின் மரணத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆயினும் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் அவர் சமூகவலைத்தளங்களில் கவலையளிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இறுதியாக “தினமும் 100 வெளிப்படையான கருத்துக்கள் வருகிறது. நான் காயமடைவதை மறுக்க முடியவில்லை. நான் இறந்துவிட்டேன். அனைவருக்கும் நன்றி. மன்னிக்கவும் நான் இனி மனிதனாக இருக்க விரும்பவில்லை”.

இதேவேளை கடந்த வருடம் ஸ்டார்டம் நிறுவனத்pன் ஃபைட்டிங் ஸ்பிரிட் விருதை ஹனா கிமுரா வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்குரண – கடுமன்குளம் முடக்கப்பட்டது!

G. Pragas

தாேப்பூரில் சிக்கிய ஷஹ்ரான் பயிற்சி நிலையம் – அதிர்ச்சி தகவல்கள் பல!

G. Pragas

விமானம் நிலையம் குறித்து இந்தியாவுடன் பேசவில்லை

reka sivalingam