செய்திகள் விளையாட்டு

293 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 64 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 44 ஓட்டங்களையும் மற்றும் ஓசத பெர்ணான்டோ 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

சிம்பாப்வே அணி சார்பில் சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்ட சிக்கந்தர் ரஷா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 406 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக வில்லியம்ஸ் 107 ஓட்டங்களையும் சிக்கந்தர் ரஷா 72 ஓட்டங்களையும் பிரன்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லசித் எம்புல்தெனிய 4 விக்கெட்டுக்களையும் தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுக்களையும் மற்றும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, முதல் இன்னிங்சில் 113 ஓட்டங்களால் சிம்பாப்வே அணி முன்னிலையில் உள்ளது.

Related posts

விடுதலை புலிகளின் தலைவரே எனது தெய்வம் – சார்ள்ஸ்

reka sivalingam

ஆடை வாங்கச் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Tharani

நுணாவில் பகுதியில் துப்பாக்கி மீட்பு!

G. Pragas