சினிமா செய்திகள்

3 வேடங்களில் சந்தானம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது, சந்தானத்தின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் இந்த புதிய படத்திற்கு ‘டிக்கிலோனா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப் பொருளால் சமூகம் மொத்தமாக அழியும் நிலை – ஹிஸ்புல்லா

reka sivalingam

புதையல் தோண்டல்; சகோதரர்கள் மூவர் கைது!

G. Pragas

வாழைச்சேனையில் பெருமளவு ஜெலக்நைட் குச்சிகளுடன் இருவர் கைது!

G. Pragas