செய்திகள்மலையகம்

மண்ணெண்ணெய்க்கு காத்திருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

வீட்டுக்குத் தேவையான மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வீட்டில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஹற்றன்- தும்புறுகிரிய வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்று தெரியவந்துள்ளது.

ஹற்றன் நகரில் வாடகைக்குக் கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் மண்ணெண்ணெய்யைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்குச் சென்று, சுமார் 12.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். வீட்டுக்குச் சென்றவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாகக் கூறி, வாந்தியும் எடுத்துள்ளார். பின்னர் நித்திரைக்குச் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை படுக்கையிலேயே அவர் உயிரிழந்து காணப்பட்டார். மண்ணெண்ணெய் பெறுவதற்காக பல மணித்தியாலங்கள் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941