செய்திகள்யாழ்ப்பாணம்

வீதித் தடைகளை அகற்றாமையால் மக்கள் கடும் விசனம்

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாட்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீதித்தடைகள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 15ம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று நல்லூர் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது.

அதனை தடுப்பதற்கான முன்னேற்பாடாக அதிகளவான வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டன.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282