செய்திகள்தலைப்புச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆவது நினைவேந்தல் இன்று!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 13 ஆவது நினைவேந்தல் முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி முற்றத்தல் இன்று உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் கடந்த 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த 12 ஆம் திகதி முதல் “முள்ளிவாய்க்கால் பேரணி” விழுந்த இடத்தில் எழுவோம் என்ற தலைப்புடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்டது.

பேரணியானது இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தை அடைந்து அங்கு பல இடங்களிலும் இருந்து வருகை தந்து  பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இனப்படுகொலையில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதன்போது தமிழ்மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவர் சி.சி.விக்கினேஸ்வரன், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உட்பட பல பிரமுகர்கள் கட்சித்தலைவர்களும் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

தமது காணாமல் ஆக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் படங்களை வைத்து கதறிக்கதறி தமது நினைவேந்தலை நிறைவேற்றினர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994