செய்திகள்தலைப்புச் செய்திகள்

மகிந்த, அமைச்சர்களின் வீடு, வாகனம் எரியூட்டப்பட்டன!

அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி கொழும்பு காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக மக்கள் தன்னெழுச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று பெரும் கலவரம் இடம்பெற்றுள்ளது.

 

பிரதமர் நேற்றுப் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளை பிரதமரின் ஆதரவாளர்களால் மைனா கோ கம, கோத்தா கோ கம மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இதனையடுத்து கொழும்பு காலிமுகத்திடலில் ஒன்று சேர்ந்த அனைத்து பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதமரின் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அத்துடன் காலிமுகத்திடல் சற்றுநேரத்தில் கலவர பூமியாக மாறிவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் நேற்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அதை பொதுமக்கள் பாற்சோறு உண்டு மகிழ்வடைந்ததுடன் தொடர்ந்து முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்களை சிறைப்பிடித்து தாக்கினர்.

இதன்போதே அவர்கள் பணத்துக்காகவும் சாராயத்துக்காகவும் இங்கு வந்தோம் என்று ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கொதித்த இளைஞர்கள் முன்னாள் பிரதமரின் வீடு, ராஜபக்ச குடும்பத்தின் நினைவுத்தூபி ,அமைச்சர்கள், மேயர்களின் வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை எரியூட்டி துவம்சம் செய்தனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941