in

சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முடிவு கட்டுக! பங்காளிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை!

சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முடிவு கட்டுக
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை!

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னின் தன்­னிச்­சை­யான செயற்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் மூன்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும், கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் கடும் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர். கூட்­ட­மைப்­பி­ன­தும், தமிழ் மக்­க­ளி­ன­தும் ஒற்­றுமை­யைச் சீர்­கு­லைக்­கும் வகை­யில் சுமந்­தி­ர­னின் செயற்­பா­டு­கள் அமை­வ­த­னால் அவர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்­றும் அவர்­கள் வலி­யு­றுத்­த­னர்.

கூட்­ட­மைப்­புக்­குள்­ளே­யான அண்­மைக்­கால சர்ச்­சை­கள் தொடர்­பில் கலந்­து­ரை­யாடி கூட்­ட­மைப்பை சிறந்த நிலை­யில் நகர்த்­து­வது பற்­றிய கலந்­து­ரை­யா­டல் ஒன்று, இரா.சம்­பந்­த­னின் இல்­லத்­தில் நேற்று நடை­பெற்­றது.
அதன்­போதே பங்­கா­ளிக்­கட்­சித் தலை­வர்­களான மாவை சேனாதிராசா (தமி­ழ­ர­சுக்­கட்சி) செல்­வம் அடைக்­க­ல­நா­தன் (ரெலோ), சித்­தார்த்­தன் (புளொட்) ஆகியோர் சுமந்­தி­ரன் மீது சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.

இது தொடர்­பில் ரெலோ சார்­பில் கலந்து கொண்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான கோவிந்­தன் கரு­ணா­க­ரன் தெரி­வித்­த­தா­வது;
“ கூட்­ட­மைப்­புக்­குள் முரண்­பாடு இருந்­தா­லும் கட்சி பிரி­யாது ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டு­வோம் என்று கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் கூறி­ய­பின்­ன­ரும்­கூட, கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் என்று தன்னை அறி­மு­கப்­ப­டுத்தி ஊடக சந்­திப்­பு­களை நடத்­தும் சுமந்­தி­ரன், பங்­கா­ளிக் கட்­சி­கள் பிரிந்து செல்­வ­தாக இருந்­தால் செல்­ல­   மு­டி­யும் என்று தரக்­கு­றை­வான கருத்­துக்­களை முன்­வைக்­கின்­றார்.

அவர் அவ்­வாறு கூறு­வ­தி­லி­ருந்து, பங்­கா­ளிக் கட்­சி­க­ளான நாங்­கள் கூட்­ட­மைப்­பில் தொடர்ந்­தும் நீடிப்­பதா என்று யோசிக்­க­வைக்­கி­றது. சுமந்­தி­ரன் கூறு­வ­தன்­படி, நாம் பிரிந்­து­சென்­றால் சம்­பந்­தன் வெறு­மனே ஒரு சாதா­ரண நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், மாவை சோ.சேனா­தி­ராசா தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வும் மட்­டுமே இருப்­பர். தவிர, கூட்­ட­மைப்பு என்­பதே இல்­லா­மல் போய்­வி­டும்.
கூட்­ட­மைப்­பை­விட்டு எவ­ரா­வது சென்­றால் தோற்­று­வி­டு­வர் என்ற நிலைமை எப்­போதோ மாறி­விட்­டது. அவ்­வாறு வில­கி­ய­வர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­க­வும் இப்­போது தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்­ற­னர்.

ஆனால் நாம் நீண்­ட­கா­ல­மாக அர­சி­யல் கட்­சி­க­ளாக உள்­ளோம். எமக்­கென்று தனி­யாக வாக்கு வங்­கி­க­ளும் உள்­ளன. எனவே வெளியே போட்­டி­யிட்டு வெற்­றி­பெ­றக்­கூ­டிய பலம் எம்­மி­டம் உள்­ளது. அவ்­வாறு தனித்­துச் செயற்­பட ஆரம்­பித்­தால், கூட்­ட­மைப்பு என்ற கட்­சியை விட­வும் ,தமி­ழர்­க­ளுக்­குத்­தான் பெரும் பாதிப்­பாக அமைந்­து­வி­டும். தமி­ழ­ரின் ஒற்­று­மை­யைச் சிதைக்­கும்.
சுமந்­தி­ரன் போன்று, எடுத்த எடுப்­பி­லேயே நாங்­கள் பிரிந்­து­செல்­ல­மாட்­டோம். எனவே, சுமந்­தி­ர­னின் செயற்­பா­டு­கள் குறித்து, அவர் தன்­னிச்­சை­யா­கக்­கூ­றி­வ­ரும் கருத்­துக்­கள் குறித்து கவ­னம் செலுத்­த­வேண்­டும்” என்று பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் இந்­தக் கூட்­டத்­தில் கோரிக்கை விடுத்­த­னர் – என்று கரு­ணா­க­ரன் தெரி­வித்­தார்.

அதே­வேளை, கூட்­ட­மைப்­பைப் பலப்­ப­டுத்­த­வும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வும், கூட்­ட­மைப்­பின் இணைத்­த­லை­வர்­க­ளாக பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் செயற்­ப­டு­வது குறித்த ஆலோ­ச­னை­யும் இதன் போது முன்­வைக்­கப்­பட்­டது. இது பற்றி அர­சி­யல்­கு­ழுக் கூட்­டத்­தில் ஆராய்ந்து சாத­க­மான பதில் வழங்­கு­கின்­றேன் என்று சம்­பந்­தன் உறு­தி­ய­ளித்­தா­ரென்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

வீட்டுத்திட்டப் பணியாளர்களுக்கு– பணம் வைப்­பிட்ட புத்­த­கத்தை அங்­க­ஜன்­தான் வழங்­கு­வா­ராம்!

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு  தொடரும்!