செய்திகள்பிரதான செய்தி

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் தாக்குதலுக்குள்ளானார்!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டம் நேற்றிலிருந்து கலவர பூமியாக மாறியுள்ளது.

மகிந்த ராஜபக்ச பதவி விலகியதையடுத்து அவரது வீடு மற்றும் அமைச்சர்களின் வீடுகள், வாகனங்கள் எரியூட்டப்பட்டு வந்தன. இந்த நிலையில் சற்றுமுன்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் ஆர்ப்பாட்டக்களத்தில்  தாக்கப்பட்டுள்ளார்.

மகிந்தவின் ஆதரவாளர்களால் போராட்டக்களம் ஒழிக்கப்பட்டதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதையும் அடுத்தே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,941