புதினம் தெரியுமோ?

தேங்காய் பால் புலாவ் ரொம்ப ருசியா 15 நிமிஷத்துல தயார் செஞ்சிடலாமே! உதிரியான தேங்காய் பால் சாதம் எப்படி செய்வது?

சுவையான தேங்காய் பால் புலாவ் இவ்வளவு சூப்பரான முறையில் நீங்களும் ஒரு முறை செஞ்சு பாருங்க, சாதாரணமாக தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் போல் அல்லாமல் இந்த புலாவ் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கக் கூடிய இந்த தேங்காய் பால் புலாவ் ருசியாக ஈசியாக எப்படி வீட்டில் தயாரிக்கப் போகிறோம்? என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.

தேங்காய் பால் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப், தேங்காய் பால் – இரண்டே கால் கப், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலை பருப்பு – ரெண்டு டீஸ்பூன், முந்திரி – 10, பச்சை மிளகாய் – 2, வர மிளகாய் – 3, நறுக்கிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு, துருவிய தேங்காய் – அரை கப்.

தேங்காய் பால் புலாவ் செய்முறை விளக்கம்: முதலில் பாஸ்மதி அரிசி ஒன்றரை கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். 300 கிராம் அளவு இருக்கும். அதே கப்பில் இரண்டே கால் கப் அளவிற்கு வருமாறு தேங்காயை திருகி மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியை களைந்து சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். 10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அரைத்து எடுத்த இந்த தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி விட்டு ரெண்டு விசில் விட்டு எடுத்தால் உதிரி உதிரியான சூப்பரான முறையில் தேங்காய் பாலில் பாஸ்மதி அரிசி நன்கு வெந்து வந்திருக்கும்.

இப்போது தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை திருகி பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு வாய் அகன்ற வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் மற்றும் நெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து, கடலை பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் வறுபட்டதும் அதனுடன் காஞ்ச மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். துருவிய இஞ்சி, ரெண்டு கொத்து கருவேப்பிலை, தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி விடுங்கள். அனைத்தும் நன்கு தாளிக்கப்பட்டதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை தூவி அடுப்பை அணைத்து லேசாக பிரட்டி விடவும்.

இதையும் படிக்கலாமே: ஈசியா ‘கார சுகியன்’ இப்படி ஒருமுறை வீட்டில் செஞ்சி பாருங்க, அப்புறம் இதோட டேஸ்ட்டுக்கு கண்டிப்பா நீங்களும் அடிமை ஆகிருவீங்க! பின்னர் நீங்கள் வடித்து வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை இதனுடன் சேர்த்து கலவை சாதம் போல நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதன் மீது பொடி பொடியாக நறுக்கிய மல்லி தழை தூவி ஒரு பிரட்டு பிரட்டி சுட சுட பரிமாறினால் அவ்வளவு சூப்பரான தேங்காய் பால் புலாவ் ரெசிபி தயார். இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க, எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282