பிரதான செய்தி

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரத விபத்து!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மினிவான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் வான் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அரியாலையை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அரியாலை ஏ.பி வீதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏ.பி. வீதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில், புகையிரதத்துடன் மினிவான் மோதி விபத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும் அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இன்றைய விபத்து சம்பவத்தினை அடுத்து விசாரணைகளை முன்னெடுக்க வந்திருந்த பொலிஸாருடன் அப்பகுதி மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக போலீசார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282