கிழக்கு மாகாணம்செய்திகள்

கூரிய ஆயுதத்தால்  தாக்கி நபரொருவர்  உயிரிழப்பு!

கூரிய ஆயுதத்தால்  தாக்கி  நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச்சம்பவம் அக்கரைப்பற்று- சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் நபரொருவர் கோடாரியால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சின்ன முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான நபராவார்.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்ததோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  அக்கரைப்பற்றுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994