தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கப் போவதில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பொய் பிரசாரங்கள் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
முழு இலங்கை தேசத்தின் அமைதிப் போராட்டத்தின் மூலமான முக்கிய கோரிக்கைகளுடன் தாமும் நிபந்தனையின்றி இணைவதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தாம் காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொள்ளாமல், ராஜபக்சக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதில் ஒருபோதும் பங்காளியாக இருக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.