in ,

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் 51வீத பங்குகள் ’அதானி’ நிறுவனத்திற்கு 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் ’அதானி’ நிறுவனத்திற்கு!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் ’அதானி’ நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை இன்று (30)  கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையின் சார்பில் அதன் தலைவரும் அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளும்  உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக துறைமுகம் மற்றும் கப்பல் சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘வெஸ்ட் கன்டெய்னர் இன்டர்நெஷனல் டேர்மினல்’ எனும் பெயரில் புதிய கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி அந்த நிறுவனத்தின் மற்றுமொரு கூட்டு நிறுவனமான ’ஜோன் கீல்ஸ்’ நிறுவனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் 34 வீத பங்குகள் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கும் 15 வீத பங்குகள் துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்றன.

ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் நிரந்தர நியமனம் வழங்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டமைக்கு பொலிஸ்தலைமையகம் கவலை தெரிவிப்பு!