செய்திகள்பிரதான செய்தி

அதிகரித்தது ஓட்டோ கட்டணம்!

ஓட்டோ கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஓட்டோவின் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபாவும் அறவிடப்படும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 12 மணி முதல் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994