in ,

மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி தரம் 08 இல் கல்வி பயிலும் 13 வயது மாணவி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் தூக்கில்  தொங்கி உயிரிழந்துள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில்  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்ததாகவும் உயிரிழந்த சிறுமி சூம் செயலி ஊடாக கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது தங்கை தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம்  தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின்  சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி அடுத்த மாதம்!

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்ட சேதனப் பசளையில் ஆபத்தான பக்டீரியா!