ஆசிரியர் தினத்தையொட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இந்த விழாவை தலைமை தாங்கி நடத்தினார்.
விருது பெறும் 377 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் காசோலையும், 36.5 கிராம் வெள்ளிப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. விருது பெறுபவர்களுள் 32 மெட்ரிக்பள்ளி, 2 ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் 3 மாற்றுத்திறனாளி ஆசிரியர்களும் உள்ளடங்குவர்.
மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் தெரிவித்தார்.
மேலும், அவர் 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்படும் என்று அறிவித்தார்.