in

4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம்

சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை

4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார்.

பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.

தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நிலைமை தொடர்ந்தால் கடுமையான சட்டத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் கட்டடங்களை விற்பனை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி