செய்திகள்பிரதான செய்தி

மே 9 கலவரம் தொடர்பில் மேலும் 16 நபர்கள் கைது!

மே 9 கலவரம் தொடர்பில் மேலும் 16 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த கலவரத்தில் இதுவரை 2 ஆயிரத்து 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 900 க்கும் மேற்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இதுவரை 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266